வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னர்

வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னர்  

மதுரை பாண்டிய மன்னனின் மீன் கொடி வியட்நாம் நாட்டில் ஜோராக பறந்த வரலாற்றை அறிந்ததுண்டா? நம் பாண்டிய மன்னன் வியட்நாமை ஆண்டிருக்கிறார்!

2000 ஆண்டுகளுக்கு முன் வீரத்திலும், பண்டைய தொழில்நுட்பத்திலும், வணிகத்திலும் சிறந்து விளங்கிய சோழர்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று ஆண்ட வரலாற்றினை படித்திருப்போம். அதே காலக்கட்டத்தில் மதுரை பாண்டிய மன்னனின் மீன் கொடி வியட்நாம் நாட்டில் ஜோராக பறந்த வரலாற்றை அறிந்ததுண்டா? நம் பாண்டிய மன்னன் வியட்நாமை ஆண்டிருக்கிறார்! அவர்தான் அந்நாடு அறிந்த முதல் வியட்நாமிய மன்னனும் ஆவார். அவரது பெயர் திருமாற பாண்டியன்.

வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டில், சம்ஸ்கிருத மொழியில் ஸ்ரீமாறன் என எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்துவிட்டதால் ஆட்சிக்காலம் முதலிய தகவல்கள் கிடைக்கவில்லை. எழுத்தின் அடிப்படையில் ஆராயும்போது இக்கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

அதே போல வியட்நாமில் வோ-சான் என்ற இடத்தில் உள்ள பெரும்பாறை ஒன்றின் மீது திருமாறன் மக்களுக்கு அளித்த நன்கொடை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கல்வெட்டிலும் பெரும்பாலான வரிகள் சிதைந்துவிட்டன. அழியாத வரிகளை படிக்கும்போது, மாறன் தனது அசையும், அசையா சொத்துக்களையும், ஆபரணங்களையும், திணைக் களஞ்சி யத்தையும் மக்களுக்காக பொதுவுடைமையாக அறிவிப்பதாக அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் கல்வெட்டின் மத்தியில் இதை தனது வம்சாவளியினர் மதித்து நடக்க வேண்டும் என்றும், இது அந்த வீரனுக்கு தெரியட்டும் என்றும் மாறன் குறிப்பிடுகிறார். மாறன் குறிப்பிடும் வீரனைப் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.

நம்முடைய பாண்டிய மன்னர் திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன் (KIU LIEN) என்றே குறிப்பிடுகிறார்கள். கி.பி. 137ல் சீனாவில் ஆண்டுகொண்டிருந்த ஹான் வம்சத்தின ருடன் கடுமையாக போரிட்டு வென்று நாட்டை கைப்பற்றி ஆட்சியமைத்தார். அதன் பின் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னர் திருமாறனே என சீனர்களின் வரலாறு செப்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சிகளின் முடிவில் கியு லியனும் திருமாறனும் ஒருவரே என்பது தெரியவந்தது. அத்துடன் அங்கே 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

******************************************************************************Source: வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னரை பற்றி தெரியுமா? by Arun Madhavan May 17, 2017, 3:53 pm         http://www.channel42.in/tamil/pandiya-s-kingdome-in-vietnam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *